Log in
updated 6:16 PM UTC, Aug 22, 2017
Headlines:

ஜோதிட கேள்வி பதில் கடன் தொல்லை தீர என்ன வழி

ஜோதிட கேள்வி பதில் கடன் தொல்லை தீர என்ன வழி?

கடன் ஏற்பட காரணம் பொதுவாக ஜாதக கட்டத்தில் கிரக சேர்க்கை காரணமாக கடன் ஏற்படும். தனகாரகன் குரு, தனஸ்தான கிரகம் பலம் குறைந்து நீச்சம் பெற்று 6, 8, 12ல் மறைந்தால் பொருளாதார பிரச்னைகள் இருக்கும். ஆனாலும் அந்தந்த காலகட்டங்களில் வரும் திசா புக்திகள்தான் கடன் சுமை பிரச்னை அதிகமாவதற்கு காரணம். ஆறாம் அதிபதியுடன் சேரும் கிரகங்கள் மூலம் கடன் பிரச்னைகள் ஏற்படும். ஆறாம் அதிபதியுடன் இரண்டாம் அதிபதி சம்பந்தப்பட்டால் குடும்ப செலவு, சுப விஷயத்துக்காக கடன் வாங்க நேரிடும். மூன்றாம் அதிபதி சம்பந்தப்பட்டால் சகோதரர்களால் பணவிரயம் ஏற்படும். நான்காம் அதிபதி சம்பந்தப்பட்டால் நிலம், விவசாயம், உடல்நலக் குறைவு, தாய் மூலம் பணம் செலவாகும். ஐந்தாம் அதிபதி சம்பந்தப்பட்டால் கல்யாணம், கல்வி வகையில் கடன் ஏற்படும். ஏழாம் அதிபதி சம்பந்தப்பட்டால், மனைவி, நண்பர்கள் மூலம் செலவுகள் இருக்கும். எட்டாம் அதிபதி சம்பந்தப்பட்டால் வீண் செலவுகள் வரலாம். அதே நேரத்தில் திடீர் யோகத்துக்கும் இடமுண்டு. ஒன்பதாம் அதிபதி சம்பந்தப்பட்டால் பூர்வீகச் சொத்துக்களை விற்க நேரிடும். தந்தையால் செலவுகள் இருக்கும். பத்தாம் அதிபதி சம்பந்தப்பட்டால் தொழில், வியாபாரம் மூலம் கடன் ஏற்படும்.

கடன் தீர பரிகாரம்

கடன் தீர சாஸ்திரத்தில் சில பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் உள்ள நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தரலாம். ஞாயிற்றுக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், சனிக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், செவ்வாய்க்கிழமையுடன் கூடிய நவமி திதியிலும் குளிகை நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் அடைபடும். தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்து வந்தால் பணப்பிரச்னைகள் காற்றில் பறக்கும். சஷ்டி திதியன்று முருகன் ஸ்தலங்களில் தொடர்ந்து கவசம் படிக்க கடன், வியாதி, சத்ரு பயம் விலகி ஓடும். தினசரி சரவணபவ என்று 108 முறை எழுதி வரலாம். ஓம்ஸ்ரீம் கம்ஸௌம்யாய கணபதியே வரவரத சர்வ ஜனம்மே வசமானய் ஸ்வாஹா.. ஹிருதயாதி ந்யாஸ நிக்விமோக... இந்த மந்திரத்தை தினசரி 108 முறையோ அல்லது அதற்கு மேலோ நம்பிக்கை, சிரத்தையுடன் மனதுக்குள் ஜெபித்து வந்தால் ருணதோஷம் நீங்கும். நன்றி..அஸ்ட்ரோ.வெ.பழனியப்பன்...கோபிசெட்டிபாளையம்.

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

23°C

Coimbatore

Partly Cloudy

Humidity: 90%

Wind: 11.27 km/h

  • 23 Sep 2017 30°C 22°C
  • 24 Sep 2017 30°C 21°C
Banner 468 x 60 px