Log in
updated 6:16 PM UTC, Aug 22, 2017
Headlines:

சிறந்த திரைப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் கொண்டது ஜாகாட்

கோபம், சோகம், மகிழ்ச்சி, விரக்தி, ஏக்கம் என அனைத்து உணர்வுகளையும் பிரதிபலிக்கும் படம்தான் ஜகாட்.

சமுதாயத்தில் நடக்கும் சம்பவங்களை அப்படியே கூறியிருக்கும் இந்தப் படம் மலேசியத் திரைப்படங்களில் மாறுபட்ட படமாகவே உள்ளது.

இத்திரைப்படத்தின் மொழி தமிழாக இருந்தாலும் மலேசியப் படம் என்ற அங்கீகாரம் கொண்டது ஜகாட்.

மேலும் குடும்ப உறவுகளில் இருக்கும் உணர்வுப்பூர்வமான பிணைப்பை அழகாகச் சொல்லும் படம்.

தோட்டத்திலிருந்து வெளியேறிய இந்தியர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கான ஆணிவேராக கல்வியைக் கண்டனர். கல்வி மட்டுமே நிலைக்கும் என சிலர் செயல்பட அதிலிருந்து தடம் மாறியவர்கள், தடம் மாற்றப்பட்டவர்கள் குண்டர் கும்பலில் உறுப்பினர் ஆகினர்.

இந்த பயணத்தின் முடிவு என்னவென்பதையும், இந்த முடிவு எப்படி வேறொரு பயணத்திற்கான தொடக்கமாக அமைகிறது என்பதையும் தைரியமாக சொல்லியிருப்பார் இயக்குனர் சஞ்ஜய்குமார் பெருமாள்.

மேலும் மலேசியாவின் தனித்துவத்தை அழகான ஒளிப்பதிவு செய்து, ஒவ்வொரு காட்சியும் கதை சொல்லும் படியாக அமைத்திருப்பார் இயக்குனர்.











Last modified onThursday, 17 November 2016 16:52

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

23°C

Coimbatore

Partly Cloudy

Humidity: 90%

Wind: 11.27 km/h

  • 23 Sep 2017 30°C 22°C
  • 24 Sep 2017 30°C 21°C
Banner 468 x 60 px